நாடு முழுவதும் 3G சேவையை மேம்படுத்த மேலதிகமாக 300 கோபுரங்களை நிர்மாணிக்கவுள்ளது

எடிசலாட் மேற்கொண்டுவரும் வலையமைப்பு விரிவாக்கல்; நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சீன பன்னாட்டு தொலைத்தொடர்புகள் கருவி மற்றும் அமைப்புமுறை நிறுவனமான ZTE கோப்பரேஷனுடன் இணைந்து நாடுமுழுவதும் 2016 ஜூன் மாத இறுதிக்குள் 300 கோபுரங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்யவுள்ளது.

எடிசலாட்டினால் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவரும் வலையமைப்பு உட்கட்டமைப்பு விரிவாக்கல் நடவடிக்கையின் ஒரு அங்கமாக நாடுமுழுவதும் 3G இணைப்பை மேலும் வலுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். கடந்த வருடத்தில் 8 மாவட்டங்களுக்கு மேல் 2G மற்றும 3G வசதியைக் கொண்ட 200 கோபுரங்கள் அமைக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன. இது நிறுவனத்தினால் ஏற்கனவே செய்யப்பட்ட முதலீட்டினால் மேற்கொள்ளப்படும் மேலதிக அபிவிருத்தி செயற்பாடாகும்.

இந்த முன்னெடுப்பு பற்றி கருத்து தெரிவித்த எடிசலாட் லங்கா பிரதம வர்த்தக அதிகாரி யசீர் அப்துல் ஹமாயம் ‘அதிகரித்துவரும் டேட்டா பாவனைக்கான தேவையை நிவர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு எடிசலாட் வலையமைப்பை விரிவாக்கவும், கிராமப்புறங்களிலும்; புறநகர் பகுதிகளிலும் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 3G  இணைப்பை பயன்படுத்தும் வசதியை பெற்றுக்கொடுக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம். இதற்கு மேலதிகமாக ‘அசுர வேகத்தில் இன்டநெட்’ சேவையையும், ‘HD குரல்’ சேவையையும் வழங்கியதன் ஊடாக மிகச்சிறந்த வலையமைப்பு என்ற பெயர் பெற்றுள்ளதுடன், ஸ்மார்ட் போன் பாவனையாளர்களின் தெரிவாகவும் எடிசலாட் வலையமைப்பு விளங்குகின்றது.

அசுர வேக இன்டநெட்டுடன் நாடு முழுவதும் தடங்கலற்ற தொடர்பை எடிசலாட் வழங்குகின்றது. இப்போது மேற்கொண்டிருக்கும் இந்த விரிவாக்கல் நடவடிக்கையானது வாடிக்கையாளருக்கு மிகச்சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் எடிசலாட்டின் விரிவாக்கப்பட்ட மேம்படுத்தல் சேவைக்காக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்பின் பகுதியாக விளங்குகின்றது

மொபைல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள எடிசலாட் நாடுமுழுவதும் தொலைத்தொடர்பு கருவிகளையும் சேவைகளையும் பயன்படுத்தும் சம வாய்ப்பினையும் வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்கள் 3.75G அசுர வேகத்துடன் கூடிய  Dual Carrier HSPA+ தொழில்நுட்ப அனுபவத்தை பெற்றுக்கொள்ளக்கூடியதுடன், all-IP நெட்வேர்க் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட உலகளாவிய ரீதியில் தொடர்புபடுத்தப்பட்ட உயர்தர HD குரல் சேவையுடன் ஸ்மார்ட் போன்கள் கொண்டுள்ள அதிநவீன வசதிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியவாறு நாடுமுழுவதும் எடிசலாட் வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

எடிசலாட் லங்கா தனது 25 வருட நிறைவையொட்டி இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது மாதத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களின் பெயர்களை அண்மையில் அறிவித்தது. இந்;த வெற்றியாளர்களுக்கான பரிசுகளை எடிசலாட் பிரதிகள் வழங்கியதுடன், இந்த நிகழ்வானது கொழும்பு 3 இல் அமைந்துள்ள அதன் பிரதான காட்சியறையில் இடம்பெற்றது.

இலங்கையில் வலையமைப்பின் 25 வருட நிறைவை கொண்டாடும் முகமாக ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 6 மாத காலத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஊக்குவிப்பு திட்டம் ஊடாக பணப்பரிசுகள், ரீலோட்கள், விமான டிக்கட்டுகள், மோட்டார் சைக்கிள்கள், ஸ்மார்ட் போன்கள், டெப்லட்கள், தங்க நாணயங்கள் மற்றும் LED தொலைக்காட்சிகள் பரிசாக கிடைப்பதனுடன், மாபெரும் பரிசாக ஆடம்பர சொகுசு ஹொன்டா வெஸல் SUV கார் ஒன்றை வெல்லும் வாய்ப்பும் உண்டு. இதன் மூலம் எடிசலாட் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு 25,000,000 ரூபா பெறுமதிமிக்க 23,000 பரிசுகளை சீட்டிழுப்பில் மூலம் வழங்க முன்வந்துள்ளது.

இதற்காக வாடிக்கையாளர்கள்; அதிகமதிகமாய் ரீலோட் செய்வதன் மூலமாகவோ அல்லது கதைப்பதன் மூலமாகவோ இப்பரிசுகளை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் ழூ25 அல்லது சூ25சூ டயல் செய்து வெல்லும் வாய்ப்புகளையும் அறிந்துகொள்ளலாம்.

அமர்ந்திருப்போர் இடமிருந்து வலமாக –
பராக்கிரம விஜேரத்ன – சிரேஷ்ட முகாமையாளர் மறைமுக விற்பனைகள், பன்னீர்செல்வம் ரமேஷ் –
டெப், திலனபலகே ஜெயசேகர – டெப், ஆறுமுகம் கந்தசாமி Nudaliyam – தங்க நாணயம், சமிந்த
பண்டார – தங்க நாணயம், நஜிம் அஹமட் – பணிப்பாளர் – வாடிக்கையாளர் பற்றுறுதி மற்றும்
வாடிக்கையாளர் தக்கவைத்தல் முகாமைத்துவம், ஷமீல் பிஷ்ரி – சிரேஷ் சந்தைப்படுத்தல்
முகாமையாளர் – முற்கொடுப்பனவு இணைப்புகள்

நிற்போர் இடமிருந்து வலமாக –
இரோஷ் பிரியதர்ஷன பெரேரா – டிவி, கவுல்பன கெதர விக்கிரமசிங்க – டிவி, பிரதீபா தருஷிகா
பெர்னாண்டோ – டிவி, இலந்திரி பெடிகே குசுமலதா – மோட்டார் சைக்கிள், சமரிக்கா டில்ஹானி
பெர்னாண்டோ – தங்க நாணயம், அயேஷா உதயங்கனி குமாரி – ஸ்மார்ட் போன்

பராக்கிரம விஜேரத்ன – சிரேஷ்ட முகாமையாளர் மறைமுக விற்பனை, ஜெயந்த சிசிர குமார – ரூ.150,000 பணப்பரிசு, சுகத் வர்ணகுலசூரிய – ரூ.150,000 பணப்பரிசு, சிறியாவத்தி ஹெட்டியாராச்சி – ரூ.150,000 பணப்பரிசு, டிலானி நலிகா பின்டோ – டிவி, சுனில் சந்திரசிறி – டெப், நிஜம் அஹமட் – பணிப்பாளர் – வாடிக்கையாளர் பற்றுறுதி மற்றும் வாடிக்கையாளர் தக்கவைத்தல் முகாமைத்துவம், ஷமீல் பிஷ்ரி – சிரேஷ் சந்தைப்படுத்தல் முகாமையாளர் – முற்கொடுப்பனவு இணைப்புகள்

 

எடிசலாட் ஸ்ரீ லங்கா: எடிசலாட், இலங்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த ஒரேயொரு மொபைல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். எடிசலாட் லங்கா நிறுவனம், ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை தளமாகக் கொண்ட உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக தரப்படுத்தப்பட்ட எமிரேட்ஸ் டெலிகொமியூனிகேஷன்ஸ் கோப்பரேசன் நிறுவனத்திற்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமாகும். இது 18 நாடுகளில் 19 இயங்குத்தளங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது பிராந்தியத்திலுள்ள ஏனைய தொலைத்தொடர்பு இயக்கங்களுடன் கூட்டிணைந்து தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்து வருகின்றது. தொலைத்தொடர்பு துறையில் பலம்வாய்ந்த நிறுவனமாக திகழும் எடிசலாட், புதிய புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றது. எடிசலாட் ஒவ்வொரு இலங்கையரையும் பலப்படுத்தும் நோக்குடன், பல்வேறு தடைகளை தாண்டி பயணித்து வருகின்றது. நாளுக்கு நாள் புத்தம் புதிய தயாரிப்புகளையும், சேவைகளையும் அறிமுகப்படுத்தி

மக்களின் வாழக்கைத்தரத்தை உயர்த்தி வருகின்றது. இவ்வாறு எடிசலாட் தனது வாடிக்கையாளர் பரப்பைப் பெருக்கி பரந்த சமூகமாக்க எதிர்ப்பார்த்துள்ளது. இலங்கையரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் அதேசமயம், எடிசலாட் இலங்கையில் முதன்முறையாக HD வொயிஸ் தொழில்நுட்பத்தை நாடுபூராகவும் அறிமுகம் செய்தது. கல்வி செயற்பாடுகளுக்காக எடிசலாட் வெப் பாட்டஷாலா மற்றும் அப்களை உருவாக்கும் தனிநபர்களுக்கும், மென்பொருள் உருவாக்கும் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அப்ஸோன் போன்ற அதிநவீன வசதிகளை அறிமுகம் செய்துள்ளது. புத்தாக்கத்திற்கான புதிய திட்டங்களை வகுத்து, வாடிக்கையாளர்களை மையப்படுத்தி, தரமான பெறுமதிமிக்க தயாரிப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. அத்துடன் இலங்கையில் அதிநவீன ual Carrier HSPA+ தொழில்நுட்பத்துடன் கூடிய இன்டநெட் சேவையை வழங்கிவருகின்றது. இவ்வாறு பல்வேறு சிறப்புகளுடன் கூடிய எடிசலாட் தற்போது 4 மில்லியனுக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களைத் தன்னகத்தே கொண்டு இலங்கையில் அதிவிரைவாக வளர்ந்துவரும் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

For more information, please contact:
Nadia De Silva – Ogilvy Public Relations
E: nadia.desilva@ogilvy.com M: +9472-233 3836

இரண்டாவது மாதத்தின் வெற்றியாளர்கள் (இடமிருந்து வலமாக):

திரு. நஜிம் ஹதின் ஹாமட் – எடிசலாட் லங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளரை தொடர்ந்து தக்கவைத்தல் தொடர்பான முகாமைப் பணிப்பாளர், L. ருமேஷ் சத்துரங்க – ஹொரனை (டெப்), G.P. சுபாஷினி மதுரமலி – புத்தளம் (LED டிவி), K.P. சரத் குமார – பிபில (LED டிவி), J.H.M. பாலித விக்கிரமசிங்க – களுகமுவ (ரூ.150,000 பணப்பரிசு), தங்கையா ஜெயந்திமாலா – நுவரெலியா (மோட்டார் சைக்கிள்), ஜெயந்தி மானேல் ரூப்பசிங்க – பொலனறுவை (ரூ.150,000 பணப்பரிசு), Y.A. நிலுஷா டிலானி – ஹேனகம (ஸ்மார்ட்போன்), G.D பியூமி மஹேஷிகா – பத்தரமுல்ல (தங்க நாணயம்), திரு. ஷமீல் பிஷ்ரி – எடிசலாட் லங்கா நிறுவனத்தின் வாடிக்கையாளரை தொடர்ந்து தக்கவைத்தல் தொடர்பான சிரேஷ்ட முகாமையாளர்

எடிசலாட் லங்கா தனது 25 வருட நிறைவையொட்டி இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தில் இரண்டாவது மாதத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களின் பெயர்களை அண்மையில் வெளியிட்;டது. இவ்வெற்றியாளர்களுக்கான பரிசுகளை எடிசலாட் பிரதிகள் வழங்கியதுடன், இந்த நிகழ்வானது கொழும்பு 3 இல் அமைந்துள்ள அதன் பிரதான காட்சியறையில் இடம்பெற்றது.

இலங்கையில் வலையமைப்பின் 25 வருட நிறைவை கொண்டாடும் முகமாக ஊக்குவிப்பு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 6 மாத காலத்திற்கு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு எடிசலாட் பல்வேறு பரிசுகளை சீட்டிழுப்பின் மூலம் வழங்க முன்வந்துள்ளது. இதில் 25,000,000 ரூபா பெறுமதிமிக்க 23,000 பரிசுகள் உள்ளடங்குகின்றன. அதாவது பணப்பரிசுகள், ரீலோட்கள், மோட்டார் சைக்கள்கள், ஸ்மார்ட் போன்கள், டெப்லட்கள், தங்க நாணயங்கள் மற்றும LED தொலைக்காட்சிகள் பரிசாக கிடைப்பதனுடன், மாபெரும் பரிசாக ஆடம்பர சொகுசு ஹொன்டா SUV கார் ஒன்றை வெல்லும் வாய்ப்பும் உண்டு.

இதற்காக வாடிக்கையாளர்கள்; அதிகமதிகமாய் ரீலோட் செய்வதன் மூலமாகவோ அல்லது கதைப்பதன் மூலமாகவோ இப்பரிசுகளை வெல்லும் வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளலாம். அத்துடன் ழூ25 அல்லது சூ25சூ டயல் செய்து வெல்லும் வாய்ப்புகளையும் அறிந்துகொள்ள முடியும்.