வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இசையை குறிப்பிடலாம். வேலைப்பழு நிறைந்த நாளின் நிறைவில், ஆறுதல் தேடி நாம் அனைவரும் நாடும் ஒரு விடயமாக இசை அமைந்துள்ளது. ஆனாலும், தமது கையடக்க தொலைபேசிகளில் காணப்படும் பாடல்களுக்கு மட்டும் ஒருவர் மட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. அத்துடன் டேடா கொள்ளளவுகளின் அடிப்படையிலும் அது மாறுபடக்கூடும்.

உங்களின் சகல இசைத்தேவைகளையும் நிவர்த்தி செய்யும் வகையில், எடிசலாட் சகாயமான இசை ஸ்ரீமிங் சேவையை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த Music App  இல் 2500க்கும் அதிகமான மியுசிக் வீடியோக்கள் காணப்படுவதுடன், 15000 இலங்கை பாடல்களும், 9000 சர்வதேச பாடல்களும் அடங்கியுள்ளன.

பழைய பாடல்கள் முதல் புதியபாடல்கள் வரை சகல விதமான இசைகளிலும் அமைந்த பாடல்கள் எடிசலாட Music App  இல் காணப்படுகிறது. எடிசலாட் வாடிக்கையாளர்களுக்கு பிந்திய பாடல்களை கேட்டு மகிழ வாய்ப்பு வழங்கப்படுவதுடன், மியுசிக் ஸ்ரீமிங்கில் இதுவரை காலமும் காணப்படாத உயர் தரம் பேணப்படுகிறது.

Song Catcher, Lyric Finder, Social Points மற்றும் Mood map போன்றன புதிய இசைகளை அல்லது பாடல்களை கண்டறிவதற்கு பயன்படுத்தப்படுவதுடன், இவை appயிpல் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் விரும்பியளவு பாடல்களை நாளொன்றுக்கு 3 ரூபாய் எனும் கட்டணத்தில் கேட்டு மகிழலாம். அத்துடன் வாராந்த அல்லது மாதாந்த கட்டணத்தில் இவற்றை அனுபவிக்கலாம்.

மேலும், புதிய பாடல்கள் மற்றும் வீடியோக்கள் போன்றன Editor’s Pick tab வயடிஇல் காணப்படும் என்பதுடன், அதிகளவு பார்வையிடப்பட்ட பாடல்கள் மற்றும் வீடியோக்கள் போன்றன Trending ல்உ ள்ளடக்கப்பட்டிருக்கும்.  Evoke இன்டர்நஷனல் உடன் கைகோர்த்து வடிவமைக்கப்பட்டுள்ள இந்த  app ஐ  play store மற்றும் App store  இலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஸ்ரீ லங்கா சுப்பர் செவன்ஸ் போட்டிகள் சூடிபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், எடிசலாட் Pயவொநசள அணி அங்கத்தவர்கள் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. 5 வருடங்களின் பின்னர் இந்த போட்டித்தொடர் கண்டி நிட்டாவெல மைதானத்தக்கு திரும்பவுள்ள நிலையில், 1ல் சுற்றுப் போட்டிகள் ஜுலை 8 மற்றும் 9ம் திகதிகளில் நடைபெறும்.

எடிசலாட் அணியில் உறுதியான நட்சத்திரங்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்கள் தேசிய, கழக மற்றும் பாடசாலை மட்டத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்கள். அணியின் தலைமைப்பொறுப்பு, ஃபாசில் மிரிஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அனுபவம் வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் இணைந்து எடிசலாட் Pயவொநசள அணியை வெற்றியை நோக்கி வழிநடத்திச் செல்லவுள்ளார். இந்த அணியில் புதிய அறிமுகங்களாக, நவீன் ஹீனகன்கானம்கே மற்றும் விமுக்தி ராஹுல ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர். இவர்கள், தமது பாடசாலைக்காகவும், இலங்கை இளைஞர் அணிக்காகவும் அண்மையில் விளையாடியுள்ளனர். எடிசலாட் Pயவொநசள அணிக்கு அசங்க ரொட்ரிகோ பயிற்சியாளராக கடமையாற்றவுள்ளதுடன், அணியின் முகாமையாளராக மஹேஷ் குமார இயங்கவுள்ளார்.

எடிசலாட் Panthers அணியின் பயிற்றுவிப்பாளர் அசங்க ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது பயிற்சிகளை இந்த வாரம் நாம் ஆரம்பித்துள்ளோம். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருந்த போதிலும், நாளொன்றுக்கு நாம் இரு பயிற்சி முகாம்களை நாம் முன்னெடுத்து வருகிறோம். எடிசலாட் Panthers அணியுடன் நான்கு வெளிநாட்டு வீரர்கள் அடுத்த வாரம் இணைந்து கொள்வார்கள். பயிற்சிகளின் மூலமாக, களத்தில் ஒவ்வொரு வீரரும் கொண்டிருக்கும் ஆளுமைகளை இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்’ என்றார்.

எடிசலாட்  Panthers  முகாமையாளர் மஹேஷ் குமார, ஸ்ரீ லங்கா ரக்பி விளையாட்டு அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும், உப செயலாளராகவும் திகழ்வதுடன், இந்த போட்டித்தொடர் குறித்து கருத்துத் தெரிவிக்கையில், ‘சுப்பர் செவன்ஸ் போட்டித்தொடரின் மூலமாக, விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொருவரின் திறமைகளை இனங்கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்த கட்டமைப்பின் மூலமாக, எமது ரக்பி வீரர்களுக்கு களத்தில் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பை வழங்குவதாக அமைந்திருந்தத. அதன் மூலம், சர்வதேச ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.’ என்றார்.

பயிற்சிகளை பூர்த்தி செய்த வண்ணம், அணியின் தலைவர் ஃபாசில் மரிஜா கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் காணப்படுகின்றனர். வௌ;வேறு கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாம் களத்தில் சந்தித்துள்ளோம். அனுசரணை அணியின் அங்கத்துவம் வகிப்பது சவால்களை கொண்டுள்ளதுடன், வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. அணியின் தலைவர் எனும் வகையில், அணியாக நாம் செயலாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும். தீவிர பயிற்சிகள் மூலமாக அந்த பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்’ எனக் குறிப்பிட்டார்.

எடிசலாட்டை பொறுத்தமட்டில் ரக்பி விளையாட்டு என்பது புதிய விடயமல்ல. கண்டி விளையாட்டுக்கழகம் மற்றும் இலங்கை இராணுவ ரக்பி கழகம் ஆகியவற்றுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. இந்த இரு கழகங்களுடனான நீண்ட கால பங்காண்மை ஊடாக, ரக்பியில் இலங்கை மக்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

எடிசலாட் லங்காவின் பிரதம வணிக அதிகாரி காலிஃவா மஹமுட் கருத்துத் தெரிவிக்கையில், ‘எமது அணியான எடிசலாட் Panthers, இந்த ஆண்டின் சுப்பர் செவன்ஸ் போட்டிகளில் பங்கேற்பது பற்றி அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த போட்டித்தொடருடன் எமது இணைவு மூலமாக, இலங்கை ரக்பி அணியை சர்வதேச மட்டத்தில் மீளமைப்பதற்கு உதவியாக அமைந்திருக்கும்’ என்றார்.

விளையாட்டில் வர்த்தக நாமம் மேற்கொண்டுள்ள முதலீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளதுடன், இது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் இந்த வர்த்தக நாமப் பெறுமதியை வழங்குவதாகவும் அமைந்திருக்கும். ஒவ்வொரு அணியிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்ற நிலையில், பங்குபற்றும் அனைத்து அணியினருக்கும் எடிசலாட் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

கண்டி, நிட்டவெல ரக்பி மைதானத்தில் கடந்த வாரம் இலங்கை ரக்பி சுப்பர் செவன்ஸ் 2017 போட்டிகளின் 1ல் பகுதி நடைபெற்றது. கண்டியில் நிலவிய மோசமான காலநிலையிலும், போட்டியில் பங்கேற்ற ஒவ்வொரு அணியும், தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியிருந்தன. 1ல் சுற்று நிறைவின் போது, காகில்ஸ் கிளாடியேட்டர்ஸ் அணியுடன் மோதி 17 – 0 எனும் புள்ளிகள் வித்தியசாத்தில் எடிசலாட் பாந்தர்ஸ் அணி வெற்றியீட்டியிருந்தது.

எடிசலாட ; பாந்தர்ஸ் அணிக்கு அது இலகுவான காரியமாக அமைந்திருக்கவில்லை, 1ம் மற்றும் 2ம் நாட்டிகளில் அவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிட்டிருந்தது. தமது முதல் போட்டியில், ஸ்ரீநாத் சூரியபண்டார சிறப்பாக விளையாடி, நுணல வூல்வ்ஸ் அணிக்கெதிராக அணியின் முதலாவது ட்ரை முறையின் மூலமாக புள்ளிகளை பெற்று தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப்போட்டியில் எடிசலாட் பாந்தர்ஸ் அணி, 19 – 17 எனும் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியீட்டியிருந்தது.

இரண்டாவது போட்டியின் போது, எடிசலாட் பாந்தர்ஸ் அணிக்கு எதிராக  Walkers CML வைப்பர்ஸ் விளையாடியிருந்தது. இதில் 26 – 07எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் எடிசலாட் அணி வெற்றியீட்டியிருந்தது. காகில்ஸ் கிளாடியேட்டர்ஸ் எடிசலாட் பாந்தர்ஸ் அணியுடன் மூன்றாவது போட்டியில் விளையாடி 19 – 15 எனும் புள்ளிகளை பதிவு செய்திருந்தது.

2ம் நாள் போட்டிகளின் போது எடிசலாட் பாந்தர்ஸ் அணி, அக்சஸ் கிங்க்ஸ் அணியை காலிறுதிப்போட்டியில் எதிர்கொண்டு, 19 – 14 எனும் புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. அரையிறுதிப்போட்டியில EZY வூல்வ்ஸ் அணியுடன் மோதி 17 – 14 புள்ளிகளை பதிவு செய்து எடிசலாட் பாந்தர்ஸ் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தது.

இறுதிப்போட்டியில் எடிசலாட் பாந்தர்ஸ் மற்றும் காகில்ஸ் கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. இதில் 17 – 0 எனும் புள்ளிகள் அடிப்படையில் எடிசலாட் பாந்தர்ஸ் வெற்றியீட்டி ஸ்ரீ லங்கா ரக்பி சுப்பர் செவென்ஸ் 2017 போட்டிக் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.

SL Geek கழகத்தினால் ஏற்பாடு செய்யப்படும்  ‘Lanka Comic Con’ நிகழ்வு 2015 முதல் வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டும், இந்நிகழ்வு மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு நிகழ்வில் பல புதிய உள்ளம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பெருமளவு பங்காளர்களும் இணைந்துள்ளனர். வயது வரையறைகளின்றி இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை இனங்கண்ட எடிசலாட், இந்நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் அனுசரணையை வழங்க முன்வநது; ள்ளது.

ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் (SLECC) நடைபெறவுள்ளதுடன், இதில் சுமார் 6000 – 9000 கள் மற்றும்
அர்வலர்கள் பங்கேற்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எடிசலாட் லங்கா வர்த்தக நாமம் மற்றும் தொடர்பாடல்கள் முகாமையாளர் உதார குணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையின் புத்தாக்க செயற்பாட்டாளர்களுக்கு வலுச்சேர்ப்பதில் எடிசலாட் நம்பிக்கை கொண்டுள்ளது. மொபைல் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநர் எனும் வகையில், தொடர்பாடல் வௌ;வேறு நிலைகளிலும், வௌ;வேறு கட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த நிகழ்வு வெறுமனே விளையாட்டுக்களமாக மட்டும் அமைந்துவிடாமல், அறிவை பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த களமாகவும் காணப்படுகிறது.’ என்றார்.

உலகளாவிய ரீதியில் எந்தவொரு Comic Con நிகழ்விலும் Cosplay முக்கியத்துவத்தை பெறும் நிலையில், இந்த இரு நாள் நிகழ்வில் பயிற்சிப்பட்டறைகள், கலந்துரையாடல்கள், இசை நிகழ்வுகள் மற்றும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விறுவிறுப்பூட்டும் செயற்பாடுகள் போன்றன முன்னெடுக்கப்படும்.

Lanka Comic Con 2017 பற்றிய மேலதிக விவரங்களுக்கு  www.lankacomiccon.lk எனும்இ ணையத்தளத்தை பார்க்கவும்.

கால அடிப்படையிலான மொபைல் டேடா பக்கேஜ்களை கொள்வனவு செய்வதற்கு எடிசலாட் தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடு;த்துள்ளது. இதற்காக உடஞை எனும் app ஐ அறிமுகம் செய்துள்ளது. மொபைல் இன்டர்நெட் இணைப்புகளை cliQ அடிப்படையில் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கொள்வனவு செய்து, மெகாபைட் மற்றும்ஜி காபைட் போன்ற புரிந்துகொள்ள சிக்கலான முறைகளை தவிர்த்துக்கொள்வதற்கு வழிகோலியுள்ளது.

ஃபின்லாந்து நாட்டின் கொம்ப்டெல் கோர்பரேஷனின் புத்தாக்கமான தீர்வாக இது அமைந்துள்ளது, இதனூடாக பாவனையாளர்களுக்கு கால அடிப்படையிலான இணைதள சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அதது; டன், வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் தமக்குரிய டேடாவை கொள்வனவு செய்கின்றனர், கொடுப்பனவு மேற்கொள்கின்றனர் மற்றும் தமது பிரத்தியேக டிஜிட்டல் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

cliQ அறிமுகத்துடன், எமது வாடிக்கையாளர்களுக்கு தங்கியிருக்கக்கூடிய மொபைல் இணைப்பு சேவைகளை புத்தாக்கமான வகையில் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அதனூடாக அவர்களின் வாழ்க்கைத்தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும’; என எடிசலாட் லங்கா பிரதம வணிக அதிகாரி காலிஃவா மஹ்முட் தெரிவித்தார்.

இந்த புத்தாக்கமான புதிய சேவையின் அறிமுகத்தின் மூலமாக, மொபைல் டேடா கொள்வனவு செய்யும் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேடாவை வழங்க முடிந்துள்ளதுடன், எடிசலாட் நிறுவனத்துக்கு வருமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எடிசலாட் உடன் இணைந்து cliQ  சேவையை அறிமுகம் செய்வதில் கொம்ப்டெல் மகிழ்ச்சியடைகிறது. இணையத்துடன் இரு பில்லியன் வாடிக்கையாளர்களை இணைப்பது எனும் எமது இலக்கை எம்மால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது.’ என்று கொம்ப்டெல்  FWD ன் பிரதம  FWD ஹரி ஜார்ன் தெரிவித்தார்.

ஜுன் 30ம் திகதி உலகளாவிய ரீதியில் வருடாந்த சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்ட நிலையில், எடிசலாட் லங்கா, Neo@Ogilvy ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்து சமூக ஊடக தினத்தை ஜுலை 9ம் திகதி அனுஷ்டித்திருந்தது.

சமூக ஊடக மாநாட்டுடன் குறித்த தினத்தின் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்ததுடன், இதில் தனியார் மற்றும் அரச துறையைச் சேர்ந்த சமூக ஊடக நிபுணர்கள்ப ங்கேற்றிருந்தனர். இந்த மாநாட்டில், நிகழ்வின் தொனிப்பொருளான “How to thrive in a World of Fragmented Media” என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

Neo@Ogilvy ன் டிஜிட்டல் மூலோபாய ஆலோசகர் மேரியன் ஸ்டீவன்ஸ் தனது உரையில், கருமையான சமூக ஊடகம் மற்றும் காணப்படும் நாளிகைகளினூடாக நபர் ஒருவர் எவ்வாறான அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். ஒன்லைன் ஊடகவியலாளரான தமித் கேதக தனது உரையில், சமூக ஊடக வலைத்தளங்களில் வழங்கப்படும் பாதகமான பிரச்சாரங்கள் உண்மையில் பாதகமானவையா என்பது தொடர்பில் ஆராய்ந்திருந்தார். அணு வலு சபையின் பணிப்பாளர் சானுக வத்தேகம ஒன்லைன் ஊடகவியல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் அதில் காணப்படும் நேர்த்தியான மற்றும் பாதகமான விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யார்தவ் மதியபரனன் மற்றும் நேழளூழுபடைஎல டிஜிட்டல் ஊடகம் மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகள் பிரிவின் தலைமை அதிகாரி அமித அமரசிங்க ஆகியோரும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றிருந்தனர். இதன் போது, வர்த்தக நாமங்கள் மற்றும் சமூக ஊடக வலைத்தளங்களில் அவற்றின் நடவடிக்கைகள் மற்றும் இடர் நிலைகளின் போது இந்த வசதிகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இந்த கலந்துரையாடலை பிரசன்னா பத்மநாதன் கண்காணிப்பு செய்திருந்தார்.

‘Meet Up’ நிகழ்வின் போது பெருமளவில் எதிர்பார்க்கப்பட்ட சமூக ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு அறிவிக்கப்பட்டு, குறித்த தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. விருதுக்கான விண்ணப்பங்கள் http://socialmediacolombo.com/ எனும் இணையதளத்தினூமாக பெறப்பட்டு, ஒருவார காலம் வரை அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. வெற்றியாளர்களை தெரிவு செய்யும் மத்தியஸ்தர்களில், அன்டிரா சொலூஷன்ஸ் பிரதம வணிக அதிகாரி, ரொஹான் ஜயவீர, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சமூக ஊடக நிபுணர் பிரசாத் பெரேரா, Yoho Bed பிரதம தொழில்நுட்ப அதிகாரி சாமர பீரிஸ், விஜய நியுஸ் பேப்பர்ஸ் சந்தைப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் ஊடக பிரிவின் தலைமை அதிகாரி உமைர் வொலிட் மற்றும Quantum Leap இணை ஸ்தாபகர் அமித கமகே ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றி;ருந்தனர்.

குறித்த நிகழ்வின் மாலை வேளை நிகழ்வுகளின் போது, சமூகத்தாருடன் பல்வேறு சமூக ஊடக விடயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தனர். இதில், இராஜ், களுமல்லி, Leitch Peitch மற்றும்  Wasthi ஆகியோரும் Facebook, YouTube, Instagram மற்றும்  Twitter ஆகியவற்றில் விடயங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.

இணையத்தினூடாக இணைக்கப்பட்டுள்ள இன்றைய உலகில், இலத்திரனியல் தொடர்பாடல்களுக்கு உடனுக்குடன் எம்மால் பதில்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது நாளாந்த செயற்பாடுகளை வினைத்திறன் வாய்ந்த வகையில் முன்னெடுப்பதற்கு இது உதவுவதுடன், வெறுப்பூட்டும் செய்திகளை விரைவாக பரவச்செய்யவும் ஏதுவாக அமைந்துள்ளது. நபர் ஒருவரை பாதிப்பதாக இது அமையாமல், வௌ;வேறு தரப்பினரிடமிருந்து வெறுப்பூட்டும் பதிவுகளையும் பெறுவதாக அமைந்திருக்கும். இணையத்தினூடாக கொடுமைப்படுத்தல் என பொதுவாக அழைக்கப்படும் இந்த நிலை இலங்கையில் அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. எதிர்காலத்தலைமுறைக்கு இது பெரும் பாதிப்பாகவும் அமைந்துள்ளது. இந்த சமூக பிரச்சினையை இனங்கண்டு, எடிசலாட் அண்மையில் இலங்கையில் இணையத்தினூடாக கொடுமைப்படுத்தலை இல்லாமல் செய்யும் அமர்வொன்றை தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

எடிசலாட் லங்கா வாடிக்கையாளர் அனுபவ பிரிவின் பணிப்பாளர் ரொமேஷ் டி மெல் இந்த அமர்வை முன்னெடுத்திருந்ததுடன், இதில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அதிகாரி மரினி டி லிவேரா, இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி, ஓழுங்குபடுத்தல் நிலையம் (இலங்கை CERT|CC) பிரதம நிறைவேற்று அதிகாரி லால் டயஸ், எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யாதவ் மதியபரணம் மற்றும் அமாயா சூரியப்பெரும (Wonder Woman Cosplayer) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

எடிசலாட் லங்கா சந்தைப்படுத்தல் பணிப்பாளர் யாதவ் மதியபரணம் கருத்துத் தெரிவிக்கையில், ‘சமூக ஊடக வலைத்தளங்களில் காணப்படும் கருத்துச்சுதந்திரத்தை எமது மக்கள் வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். தமது நண்பர்களை கொடுமைப்படுத்த இதை ஒரு சாதனமாக பல இளைஞர்கள் பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. பொறுப்பு வாய்ந்த தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் எனும் வகையில், இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த விடயம் தொடர்பான ஒழுக்கக்கோவை ஒன்றை நிறுவுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.

இலங்கையில் தற்போது காணப்படும் நிலை தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அதிகாரி மரினி டி லிவேரா கருத்துத்தெரிவிக்கையில், ‘இணையத்தினூடாக கொடுமைப்படுத்தப்பட்ட நபர்கள் பெருமளவான சந்தர்ப்பங்களில் தமக்கு நேர்ந்த விடயம் பற்றி பேச கூச்சப்படுவார்கள். அமைதியாக இருந்து அதை அனுபவிப்பார்கள். இந்த நிலையை உணரக்கூடிய ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும், இந்த நிலையிலிருந்து மீள உதவக்கூடிய தரப்பினரை நாம் உருவாக்க வேண்டும்’ என்றார்.

இலங்கை CERT ன் பிரதம நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவிக்கையில், ‘தற்சமயம் தம்மை கொடுமைப்படுத்தும் ஒரு நபரை, பக்கத்தை block செய்து அதனை செய்யும் வசதி காணப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சட்டபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வது மிகவும் நீண்ட செயற்பாடாக அமைந்துள்ளது. இணையத்தில் கொடுமைப்படுத்தல் என்பது, குறித்த பதிவு அதிகளவானோர் மத்தியில் பகிரப்படுவதன் காரணமாக அதே பதிவை அறிமுகமில்லாத ஒரு தரப்பு குறித்த பாதிக்கப்பட்ட நபருக்கெதிராக பயன்படுத்தி அந்நபரை மேலும் அசௌகரியத்துக்குட்படுத்தக்கூடும். இந்த சநிழசவஇ டிடழஉமஇ னநடநவந முறை தற்போது காணப்பட்டாலும், அது வினைத்திறன் வாய்ந்ததாக குறிப்பிட முடியாது. இந்த பக்கங்கள் மீண்டும் சில காலங்களின் பின்னர் உயிர்ப்பதை நாம் கண்டுள்ளோம். இந்த அமர்வின் பின்னர், இலங்கையில் இணையத்தினூடாக கொடுமைப்படுத்தலை இல்லாமல் செய்வதற்கு முறையான சட்ட கட்டமைப்பு ஒன்று காணப்பட வேண்டியது முக்கியமானது என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எம்மிடம் முறையான சட்ட கட்டமைப்பு காணப்பட்ட போதிலும், வெளிநாட்டு சேவை வழங்குநர்களிடமிருந்து உதவி, பங்களிப்பு கிடைக்காவிடின் நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக அமைந்துள்ளது. சமூக ஊடக வலைத்தள பாவனை மற்றும் தொழில்நுட்பத்தின் பாவனை ஊடாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.’ எனற் hர்.

அமாயா சூரியப்பெரும இந்நிகழ்வில் உரையாற்றும் போது, ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற Lankan Comic Con நிகழ்வைத்தொடர்ந்து அமாயா இணைய கொடுமைப்படுத்தலுக்கு ஆளாகியிருந்தார். ‘இந்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற  Lankan Comic Con  நிகழ்வில் பங்கேற்று அதில் Wonder Woman Costum அணிந்திருந்ததையிட்டு பெருமையடைந்தேன். புகைப்படங்கள் எடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவை Facebook ஊடாக மக்கள் மத்தியில் சென்றடைய ஆரம்பித்தது. எனது தோற்றம் தொடர்பில் என்னை ஏளனம் செய்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். Meme பக்கள் எனது இந்த பதிவை பயன்படுத்த ஆரம்பித்ததும் அது கட்டுக்கடக்கமுடியாமல் போனது. அதிர்ஷ்டவசமாக, ஒன்லைன் சமூகத்தின் உதவி எனக்கு கிடைத்தது. என்னை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் செயலாற்றினார்கள். இந்த விடயம் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த இந்த அமர்வு பயன்தருவதாக அமைந்திருக்கும் என்பதில் நான் எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தேன்’ என்றார்.

ஓனi; லன் செல்வாக்குச்செலுத்துநர்கள், இலங்கை CERT பிரதிநிதிகள,; இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதிநிதிகள் மற்றும் ஊடக அங்கத்தவர்களை இந்த நிகழ்வு ஒன்றிணைத்திருந்தது. இதன் போது இந்த விடயம் தொடர்பில் அமைதியான முறையில் விவாதமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது மக்கள் மத்தியில் இந்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி இந்த அமர்வில் ஆராயப்பட்டிருந்தது. இதற்காக ஏனைய அரச மற்றும் தனியார் அமைப்புகளின் உதவிகளை பெற்றுக்கொள்வது பற்றியும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.