அப் சோன் என்றால் என்ன?

அப் சோன் என்பது இலங்கையில் முதல் முறையாக எடிசலாட் வலையமைப்பினால் hSeni மொபைலுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட எஸ்எம்எஸ் அடிப்படையிலான மொபைல் பயன்பாட்டுத் தளம் ஆகும். இந்த தளமானது வாடிக்கையாளர்கள் தமது மொபைல் அப்ஸ்களை பயன்படுத்துவதற்கும், இலங்கை மொபைல் அப்ளிகேஷன் உருவாக்குனர்கள் தங்களது சொந்த, தனித்துவமிக்க அப்ஸ்களை உருவாக்கவும், சோதனை செய்யவும், விற்பனை செய்யவும் வாய்ப்பளிக்கிறது. எடிசலாட் இலங்கை, hSenid மொபைல் நிறுவனத்துடன் இணைந்து, இலங்கையின் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்மென்ட் துறையை உலகளாவிய தரத்திற்கு இட்டுச் செல்லும் முதற்கட்ட படிமுறையை ஆரம்பித்துள்ளது.

இது யாருக்காக?

அனைத்து இலங்கை மொபைல் மென்பொருள் டெவலப்பர்களுக்கும், அவர்களின் மொபைல் பயன்பாடுகளின் விரைவான வளர்ச்சி மற்றும் வணிகமயமாக்கல் அனுபவத்திற்கு இந்த திட்டம் வழிவகுக்கின்றது. பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தனிப்பட்டோர், தொழில் ரீதியாக செயற்படும் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனங்கள் என்பனவற்றுக்கு தமது மொபைல் மென்பொருட்களை உருவாக்கவும் விற்கவும் தற்போது இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எங்கள் இலக்குகள்

 • உள்ளூர் அப்ளிகேசன் டெவலப்பர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோருக்கு ஒரு புதிய சந்தர்ப்பத்தை வழங்குவதும் இந்த துறையில், இந்த பிராந்தியத்தில் அவர்களுக்கு ஒரு இருப்பினை ஏற்படுத்திக் கொடுத்தலும் ஆகும்.
 • அனைத்து எடிசலாட் பாவனையாளர்களுக்கும் தங்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு சிறந்த அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவற்கு வாய்ப்பு அளிக்கின்றது.
 • மென்பொருள் உற்பத்தியாளர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமது உற்பத்திகளை பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. இதன் மூலமாக அவர்கள் அதிகமான வாய்ப்பினையும் புகழையும் பெறுகின்றார்கள்.
 • உள்ளூர் மொபைல் மென்பொருள் டெவலப்பர்களை ஊக்குவிப்பதன் வாயிலாக அந்த துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்தல்.
 • இதுவரை இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சாராருக்கு அப்பால், அனைவருக்கும் வாய்ப்புகளை திறந்து விடுதல்.

எங்களின் API:s ஐ பயன்படுத்தி உங்களது அப்ளிகேசன்களையும் சேவைகளையும் உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையான பதிவிறக்கங்கள் இங்கே காட்டப்பட்டுள்ளன. அவ்வாறே உங்களுக்குத் தேவையான ஆவணங்களும் விடயங்களை வேகப்படுத்தக்கூடிய ஒரு சமூகமும் இங்கு காணப்படுகின்றன.

உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

 • உங்களின் உள்ளடக்கங்ளையும் அப்ளிகேசன்ளையும் 3 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட சந்தை வலையமைப்பில் விநியோகியுங்கள்.
 • உங்கள் அப்ளிகேசன்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 70%ஐ உழைத்துக் கொள்ளலாம்.
 • உங்கள் அப்ளிகேசன்களுக்கு அளவுகோல்களை விதித்து எமது டேஷ்போர்டின் ஊடாக அரியனவற்றைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
 • இலங்கையின் மிகப்பெரிய டெவெலப்பர் சமூகத் தளத்தின் ஒரு தொழில்முறை டெவலப்பர் என்ற ரீதியில் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

இலவசமாக வழங்கப்படும் உதவு பொருட்களை அறிந்து கொள்ளுங்கள்.

மாதிரி அப்ளிகேசன்கள்

உங்களது அப்ளிகேசன்களை உருவாக்குவதற்கான கருத்துக்கள் வழங்கப்படும். இலவசமாக வழங்கபடுகின்ற ஆதரவு பொருட்களை கண்டுபிடித்தல். மாதிரி பயன்பாடுகள் உங்கள் அப்ளிகேசன்களை உற்பத்தி செய்வதற்கும் விருத்தி செய்வதற்கும் ஆலோசனை வழங்கப்படுகின்றது.

 • ஜாவா மாதிரி அப்ளிகேசன்
 • பிற மாதிரி அப்ளிகேசன்கள்

சிமுலேட்டர்கள்

விருத்தி செய்யப்பட்ட அப்ளிகேசன்களை பரசோதித்துப் பார்க்க உதவும்.

 • சிமுலேட்டர்கள்

வழிகாட்டல்கள்

அப்ளிகேசன்களை அபிவிருத்தி செய்யும்போது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பான வழிகாட்டல்கள்.

 • டெவலப்பர் கையேடு
 • சிமுலேட்டர் கையேடு
 • அவதூரா பயனர் கையேடு

காணொளி வழிகாட்டல்

ஒரு அப்ளிகேசனை தயாரிக்கும் போது பயன்படுத்தப்படும் கருவிகள், தொழிநுட்பம் என்பனவற்றை எமது நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட வீடியோ கிளிப்புகளை ஓடவிட்டு, ஆரம்பத்திலிருந்தே கற்றுக்கொள்ளுங்கள்.

 • ஒரு அப்ளிகேசனை எவ்வாறு உருவாக்குவது. (வீடியோ வழிகாட்டி)
 • சிமுலேட்டருடன் எவ்வாறு வேலை செய்வது (வீடியோ வழிகாட்டி)

வெளியீடு செய்யுங்கள்....

உங்கள் அனைத்து படைப்புகள்
உங்கள் கற்பனைகள்,
உங்கள் முயற்சிகள்
மற்றும் உங்களின் சேவைகள்

 • உங்கள் அப்ளிகேசனை உருவாக்கி முடித்துவிட்டீர்களா?
 • உங்கள் அப்ளிகேசனை நீங்கள் பரிசோதித்துவிட்டீர்களா?
 • அது SDP சிமுலேட்டருடன் வேலை செய்கிறதா?

மில்லியன் எடிசலாட் அங்கத்தினர்களை சந்தையாகக் கொண்ட வலையமைப்பில் உங்கள் அப்ளிகேசன்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து கொள்வதற்கு இதுவே தக்க தருணம். support@appzone.lk என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி உங்களது கணக்கு விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் அப்ளிகேசன்களை இல் தரவேற்றம் செய்யுங்கள்.

TOP